வியாழன், 5 மே, 2011

நம் திருமணத்தில் பாப்பான் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?


திருமணம் செய்துகொள்ள போகிறவர்களே...உங்கள் திருமணத்தின் பொழுது பாப்பான் சொல்லபோகும் மந்திரத்தின் பொருள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதோ ...
ஒரு சில மந்திரமும் அதன் பொருளும்....!!


ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி


பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
http://www.yarl.com/forum3/index.php?showtopic=38763

நாம் பாப்பானை கொண்டுதான் திருமணத்தை நடத்தவேண்டுமா?
சிந்தியுங்கள் தோழர்களே ...!!!
==================

திருமணத்தின் போது பாப்பான் சொல்லும் மந்திரத்தின் பொருள் உங்களுக்கு தெரியுமா?


திருமணத்தில் பாப்பான் ஓதும் மந்த்ரங்களுக்கு ஒரு எடுத்துகாட்டு...


“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்...”...


இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்... அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும் பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச்செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

.இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது...வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல...


“ஸ்வாமீ... நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை... நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே...”

“வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான

- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நீரின்றி அமையாது உலகு...!

ஆப்பிரிக்க காடுகளில், தண்ணீர் இருக்குமிடத்தை, அங்கு வாழும் மக்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்...?

அதை அறிய, கீழே உள்ள காணொளியை (video) காணவும்.

திங்கள், 10 ஜனவரி, 2011

நீங்களும் மதகுருவாகலாம் - செயல்முறை விளக்கம்

ஒரு புதிய மதத்தை உருவாக்க வேண்டுமா? உங்களையே பின்பற்றும் ஒரு கூட்டத்தின் மதகுருவாகலாம் .இது மிக எளிது . மற்றவர்களை மூளைச் சலவை செய்யும் கலையை கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவது எப்படி? பின்பற்றுபவர்களின் மனதில் அச்சவுணர்வை தோற்றுவிக்கவும். மத நம்பிக்கையாளர்கள் உங்களையே கடவுளின் அவதாரமாக, ஆண்டவனின் குமாரனாக, இறைதூதராக நம்புவார்கள். மதகுருவாக வர விரும்புபவர்களுக்கு உதவும் பாடங்களை கற்றுக் கொடுக்கும் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து பயிற்சி எடுப்பவர்கள், எதிர்காலத்தில் சாய் பாபா போன்று, நித்தியானந்தா போன்று புகழ் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.


வெள்ளி, 12 மார்ச், 2010

கதவை திற கட்டழகி வரட்டும் .....!!!

கதவை திற காற்று வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கொஞ்சம் கவனிக்காமல் கதவை திறந்து வைத்ததால் அவரின் படுக்கையைறையில் காமிர நுழைந்து இப்பொழுது டீவிக்களில் நித்தியானந்தரின் காமக்களியாட்டம் அரைமணி நேரத்திற்கொருமுறை நவராத்திரி பூஜையாக ஓடுகிறது.
முன்பு நினைத்தவுடன் அந்த பின்நவீனத்துவ எழுத்தாளரின் எதிரில் திடீரென்று காரில் கடந்து போகும் நித்தியானந்தர், இனி நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் செல்போன்களில் சிரித்தபடி ஒரு பெண்ணுடன் காட்சி தருவார்..
நித்தியானந்த சுவாமிகள், பக்தர்களுக்கு ஜீவன முக்தி கொடுத்து, தியான பீடம் நடத்தி, வாழக்கை வாழ கற்று கொடுத்துக்கொண்டிருந்தவர் ஒரு சில நொடி சலனப்படத்தால் இப்பொழுது சலனப்பட்டுக் கொண்டிருக்கலாம்!
____________ _________ _________ _____
திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகர் ஏதோ குறி சொல்லிக் கொண்டிருந்த பையனாக இருந்தவர் ஒரு இனிய நாளில் கார்ப்பரேட் சுவாமியாக களமிறக்கப்பட்டார். அகமுடை முதலியார் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இந்த பையன் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆன்மீகம், நிறைய சரக்கு என்று சுற்றிக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் ஓரளவு கணிசமாக வாழும் இந்தச்சாதிப் பிரமுகர்கள்தான் நித்தியானந்தாவை திட்டமிட்டு உருவாக்கினர். அரசியலில் அண்ணா, அன்பழகன் என்று பெரும் கைகள் உருவாயிருந்த இந்த சாதி வட தமிழகத்தில் எல்லா விதங்களிலும் முன்னேறிய சாதியாகும். எல்லாத் துறையிலும் கொடி கட்டிப் பறந்த இவர்களுக்கு ஆன்மீகத்தில் மட்டும் ஆளில்லை என்ற போது இந்தப்பையன் கிடைத்தான்.
ஆனந்த விகடனில் சுகபோதானந்தா மனசே ரிலாக்ஸ் என்று பக்தர்களை பரவசப்படுத்திக் கொண்டிருந்த போது குமுதம் போட்டிக்காக நித்தியை ஆரவாரமாக இறக்கியது. சில வருடங்களுக்குள் நித்தியானந்தா கார்ப்பரேட் தரத்தை அடைந்து விட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நித்தியானந்தா ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒளிக் குறுந்தகடுகள், திரும்பிய இடமெல்லாம் விவேகானந்தர் போல, பரமஹம்சர் போல, முண்டாசு கட்டி, சிரித்தவாறு, என்று என்னன்னமோ தினுசுகளில் படங்கள்……….என்னடா ஒரு அரைலூசுப் பையன் இந்த போடு போடுகிறானே என்று தெரிந்தவர்களுக்கு ஆச்சரியம்.
____________ _________ _________ _____
பெங்களூரு மைசூர் சாலையில் புறநகரில் பல பத்து ஏக்கர் நிலத்தில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. நவீன பளிங்குகள் பதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்த்தால் அது ஆசிரமம் அல்ல, ஐந்து நட்சத்திர விடுதி என்றே தோன்றும். விடுதிகள், தியான மண்டபங்கள், சாமி அருள்பாலிக்கும் அரங்குகள், புத்தக விற்பனை நிலையம் என்று எல்லா வசதிகளும் அங்கே நேர்த்தியாக இருக்கின்றன.
ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகள் தெரிந்த உதவியாளர்கள் பெண்களையும் உள்ளிட்டு எல்லா பக்தர்களையும் மொழிபெயர்த்து சாமியிடம் சேர்ப்பதும் பின்னர் சாமி தமிழிலும், கன்னடத்திலும் பேசுவதை பக்தர்களிடம் சேர்ப்பிப்பதுமாய் இருப்பார்கள். பல்வேறு தியான பேக்கேஜ்கள் காலத்தைப் பொறுத்து 2500, 5000, 10,000 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். காசுக்கேற்ற தோசை. அல்லது சேலம் சிவராஜ வைத்தியரின் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம், சாதா செட், ஸ்பெஷல் செட் போலவும் சொல்லலாம்.

நித்தியானந்தா தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிக செல்வாக்குடன் திகழ்ந்ததற்குக் காரணம் அரசியல்வாதிகள். முதலமைச்சர் எடியூரப்பா முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் எல்லாம் சாமியின் தீவிர பக்தர்கள். அடுத்து குறுகிய காலத்தில் உடலையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் பாதுகாப்பதற்கு விரும்பும் நவீன இளைய சமூகம் அதாவது ஜ.டி ஜென்டில்மேன்கள் ஆசிரமத்தை எப்போதும் நிரப்பி வந்தனர்.
திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் முக்கியமான இடத்தை நித்தியின் ஆட்களை கைப்பற்றி ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். இந்த இடம் குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உள்குத்து இருப்பதால் இப்போது இவர்கள் சாமி அம்பலப்பட்ட பிறகு எதிர்த்திருக்கிறார்கள். இரண்டு ஊர் ஆசிரமங்களையும் சேர்த்தால் நித்தியானந்தா பல கோடிகளுக்கு அதிபதி.
நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக வகுப்புக்கள பல சுயநிதிக் கல்லூரிகளில் நடந்திருக்கின்றன. தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு கல்லூரி முதலாளிகள் மாணவர்களை மிரட்டி கொண்டு வந்திருக்கின்றனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் எதிர்ப்பு காட்டியதும் அவ்வப்போது செய்தியாக கசிந்தது உண்டு.
அப்புறம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிம்மதியை இடைவிடாமல் தெடும் வெள்ளைத் தோல் மனிதர்கள் வந்து சாமியை கண்டம் கடந்து தூக்கி சென்றார்கள். இப்படியாக ஒரு இளைஞன் பக்காவான கார்ப்பரேட் சாமியாக நிலைபெற்றான்.
____________ _________ _________ ______
கார்ப்பரேட் சாமியார்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உள்ள உறவு என்பது சொல்லில் புரியவைக்க கூடியதல்ல. ஏனெனில் அந்த உறவு ஒரு நேர்த்தியான மார்க்கெட் தந்திரம். சாமியாரின் அசட்டு பிசட்டு தத்துவ அவஸ்தைகளை விறுவிறுப்பான மொழியில் நுட்பமான கதை சொல்லாடல்களுடன் பக்தர்களிடம் அள்ளி வீசுவதற்கு நவீன இலக்கியவாதிகள் கட்டாயம் தேவை.
விசிறி சாமியாரைப் பற்றி பாலகுமாரன், சுகபோதானந்தாவிற்கு ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர்கள், ஈஷா யோக ஜக்கி வாசுதேவிற்கு இரட்டையர்கள் சுபா என்றால் நித்தியானந்தாவை குமுதம் பத்திரிகையே தத்து எடுத்துக் கொண்டது. ஆனாலும் குமுதம் விரும்பிய அளவிற்கு நித்தியானந்தாவின் பத்திகள் அவ்வளவாக எடுபடவில்லை.

____________ _________ _________ _________ ___
சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன் என்ற வரிசையில் இப்போது நித்தியானந்தா. ஆனாலும் நித்தியானந்தா செய்திருப்பது சட்டப்படி குற்றமல்ல. அவர் நடிகை ரஞ்சிதாவை பாலியல் வன்முறை செய்யவில்லை. இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியிருக்கின்றனர். வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு. ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. ஆனால் இது ரஞ்சிதாவோடு மட்டும் இருந்திருக்கக்கூடிய உறவல்ல. ஊர்மேய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருந்தால் ஒரு பொறுக்கி ஒன்றோடு நிறைவு பெறுவதில்லை.
தேவநாதனும் யாரையும் கற்பழிக்கவில்லை. இந்து ஆகம விதியின் படி கருவறையை பள்ளியறையாக பயன்படுத்துவது கல்லாலான சிலைகளுக்கு மட்டுமல்ல அந்த பேசா சிலைகளுக்கு தரகர்களாக இருக்கும் புரோகிதர்களுக்கும் உள்ள உரிமைதான் என்பதைக்கூட சாத்திரத்தை வைத்து நியாயப்படுத்தலாம். இப்போது தேவநாதன் ஜாமீனில் வெளியே கிராப் வைத்த தலையுடன் ஊர் உலகத்தில் செய்யாத தவறையா செய்து விட்டேன் என்று பேட்டி கொடுக்கிறான்.
சங்கரராமனை ரவுடிகளை வைத்து கொன்ற ஜெயேந்திரனும் கூட இப்போது எல்லா சாட்சிகளையும் பிறழ வைத்திருப்பதால் குற்றவாளியில்லைதான். மற்றபடி ஜெயேந்திரன் பெண்டாண்ட காட்சிகளை எந்த காமராவும் அவ்வளவு சுலபாமா எடுத்திருக்க முடியாது. அப்படி எடுத்திருந்தால் காமராக்காரன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நாளை நித்தியானந்தாவை மன்மதனாக சித்தரிக்கும் எல்லாப் பத்திரிகைகளும் ஜெயேந்தரனுக்கு பழைய லோககுரு பட்டத்தை எப்போதோ வழங்கி விட்டன.
சாய்பாபா ஆசிரமத்தில் நடந்த கொலைகளும், பாபாவின் பாலியல் வன்முறைகளை வெளிநாட்டு சானல்களே அம்பலப்படுத்தியிருந்தாலும் அந்த ஹிப்பித் தலையனின் செல்வாக்கு மங்கவில்லை. இன்றும் பிரதமர், குடியரசுத் தலைவர்கள் அங்கே அடிபணிந்தே வணங்குகிறார்கள். மற்றொரு கார்ப்பரேட் சாமியாரிணியான மாதா அமிர்தானந்த மாயியின் ஆசிரமத்திலும் கூட கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அம்மாவை யாரும் அசைக்க முடியவில்லை.
கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.
மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது. குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஜெயேந்திரன் லீலைகள் சந்தி சிரித்துக்கொண்டிருந்த போது பார்ப்பனர்கள் மட்டும் கர்ம சிரத்தையாக பெரியவாள் தப்பு செய்யவில்லை என்று உறுதியாக நிற்கவில்லையா என்ன?
____________ _________ _________ ____
நித்தியானந்தாவாவோடு முரண்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ வெகு சிரத்தையாக எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னரே எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை யாரும் வெளியிட விரும்பவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் கார்ப்பரேட் சாமியார்களை வைத்து தமது நடுத்தரவர்க்கத்து வாசகர்களுக்கு நன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாயைகளை விதைத்து வந்தவர்கள் தங்களையே வில்லன்களாக காட்டுவதற்கு சம்மதிப்பார்களா என்ன?
சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை. ஒரு வேளை சன் தொடர்புடைய நடிகைகளை கலைஞர் டி.வி காண்பிக்கும்பட்சத்தில்தான் சன்னுக்கு பிரச்சினை. ஆனாலும் இரண்டும் கழக கண்மணிகளின் சொத்து என்பதால் பெரிய பிரச்சினையில்லை.
நக்கீரன் பத்திரிகை நித்தியானந்தாவை வெளியிடுவதும் கூட போட்டி மற்றும் தனது குழும சாமியார் அல்ல என்ற தைரியம் மட்டும்தான். ஜக்கி வாசுதேவை நக்கீரன் உட்பட எல்லா பத்திரிகைளும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கே முக்கியம்தான். ஒருவேளை ஜாக்கிக்கு இது நடந்திருந்தால் இந்த விடயம் வெளியே வந்திருக்காது. ஏனெனில் எல்லா பத்திரிகைகளும் அவரது அன்பில் நனைந்தவைதான்.
____________ _________ _________ _________ __
கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?
யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை.


தமிழ்மணி-

வியாழன், 21 ஜனவரி, 2010

காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்…பிராமணர்கள் யார்..?

எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்- தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 )
சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.
இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்து மத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் என்ற முறைமையில் நாம் மகிழ சில சங்கதிகள் உண்டு.உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை நாம் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் கடவுள்ள அது: கல் தான் .. என நாம் காட்டுக்கத்தலாய் தெரு முனைகளில் கத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் வெகு சுலபமாக பாலாலும், தேனாலும் அபிஷேகம் செய்து படையல் வைத்து ஆயிரம் காலமாய் புனிதம் போற்றி தொழுகிற அந்தணர் பாதம் மட்டுமே பட்டு வந்த கருவறைக்குள் எல்லாவித தடைகளுக்கும் சவாலாய் சாதி வேறுபாடின்றி பெண் என்ற ஒற்றைத் தகுதியை மட்டும் பார்த்து கட்டிய குடுமியுடன் கட்டிப்பிடித்து ஆலிங்கணம் நடத்திய தேவநாதன் இத்தனை ஆண்டு காலம் பார்ப்பனர் கட்டி வைத்த பாரம்பரிய கோட்டையின் அடித்தளத்தில் குண்டு வைத்து தகர்த்திருக்கிறான்.தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற நாத்திகனாக நமக்குப் படுகிறான். தமிழர்க்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது.
தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது. இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.
தந்தை பெரியார் சொல்கிறார்…பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்- தந்தை பெரியார் (3-12-1971 விடுதலையில்..)பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான்.கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு..சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கிக் கொண்டு நாம் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய நம்மை வெளியே நிற்க வைத்து ..அழகு பார்த்த பார்ப்பனீய இந்து மத பிரதிநிதியான தேவநாதன் கடவுளை போற்றும் சிறப்பு இதுதான்.ஆனால் இதையெல்லாம் உணராத தமிழ்ச்சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள்,சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தமிழன் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறான்.தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைவினை தேவநாதன் மிக எளிமையாக தன் காமத்திற்காக நிகழ்த்தி தன்னுடைய கேடு கெட்டத் தனம் கடவுளை விட உயர்ந்தது அல்ல என்பதனை நிருபித்து இருக்கிறான்.இதில் நாமும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. தமிழனின் கருவறை நுழைவு இப்படி யாருக்கும் தெரியாமல் காமத்தின் பாற் கேடு கெட்டத்தனமாய் விளையாமல்..சாதிகளை துறந்த சமத்துவ நோக்கில் கலகம் வாய்ந்த புரட்சியாக நிகழ வேண்டும் என்பதே.தேவநாதனை விளக்குமாற்றால் அடிக்க பெண்கள் பாய்கிறார்கள். இதையெல்லாம் தனக்கு முன்னால் நிகழ்த்திக் கொண்டு இன்னும் கல்லாக சமைந்து நிற்கும் கடவுளின் சிலைகளை இவர்கள் எக்காலத்தில் எதனைக் கொண்டு அடிக்கப் போகிறார்கள்.?தந்தை பெரியார் தன் வாழ்நாட்கள் முழுவதையும் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து வந்ததை தேவநாத பார்ப்பான்கள் தங்கள் நடத்தைகள் மூலம் நிரூபித்து காட்டுகிறார்கள்.

இந்த நிகழ்வு மூலம் கோவில் ,சிலைகளின் எல்லையற்ற அதிகாரமும், புனிதமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பார்ப்பன மேலாண்மையின் சீரழிவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.பார்ப்பன லீலைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தேவநாதனுக்கு நாம் நன்றி சொல்வதோடு..இனியாவது பார்ப்பானிடம் ஏமாறாத சமூகம் தமிழ்ச் சமூகம் அமைய உறுதி கொள்வோம்.
நன்றி:-நாம் தமிழர் இயக்கம்

'தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பதற்காக'.......!!!


'தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பதற்காக' கூட்டணி சேர்வதென்று முடிவெடுத்திருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். கூடவே வருகிற ஏப்ரல் முதல் இந்த 'தர்ம' யுத்தத்திற்காக டிவி சேனல் ஒன்றையும் தொடங்குகிறார். அதன் பெயர் கேப்டன் டிவி. கலைஞர் டிவி இருக்கும் போது, கேப்டன் டிவி இருக்கக்கூடாதா? அதனால் சன் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி, வசந்த் டிவி வரிசையில் இன்னொரு அரசியல் பின்புலம் கொண்ட சேனல் தமிழக 'தொலைக்காட்சி ஜனநாயகத்திற்கு' உரம் சேர்க்கப் போகிறது. தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களின் வீட்டு வரவேற்பறையில் செய்தி என்ற பெயரில் சற்று அதிகமாக கொட்டப் போகிறது அரசியல் குப்பை.
விஜயகாந்த் இந்த இடத்திற்குத்தான் வந்து சேர்வார் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அந்த நாள் வந்து சேரும் என்று நினைக்கவில்லை. தொடர்ச்சியான இடைத் தேர்தல் தோல்விகள், டெபாசிட் இழப்புகள் அவரை கனவுலகிலிருந்து யதார்த்த உலகிற்கு இழுத்து வந்திருக்கிறது. தனிக் கட்சியாகவே ஆட்சியை பிடிக்க முடியும் அல்லது அதிகாரத்தை அடைய முடியும் என்ற கனவை அவர் நம்பினார் என்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். ஆனால் விஜயகாந்தின் ரசிகர்களும் அரசியல் முகவரி தேடி அவர் பின்னால் அடைக்கலமானவர்களும் அதை நம்பினார்கள். அந்தக் கனவு அவர்கள் மத்தியில் கலையத் தொடங்கிய சமயத்தில் அவர்களுக்கு வேறு கனவுகளை விற்க வேண்டியிருக்கிறது. அதனால் இப்போது கூட்டணிக் கனவுகளை வளர்க்கிறார் விஜயகாந்த். திராவிட நாடு கனவை வளர்த்தவர்கள் ஓர் நாளில் அதை உடைக்கவில்லையா? பி.சி.சொர்க்காருக்கு திராவிட அரசியல்வாதிகள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ராபின்சன் பூங்காவில் அவதரித்த இரு இயக்கம் பின்னாளில் வெளிப்படுத்திய அரசியல் தந்திரங்களை ராம அவதாரம் கோலிவுட் வரை பரப்பிவிட்டதை விஜயகாந்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலும் காட்டுகிறது.
ஒரு உயரிய சமூக நோக்குடன் உருவாகி, பல புரட்சிகளை சாத்தியமாக்கி, நடுவில் வழி தவறி, இன்று சீரழிவின் விளிம்பில் நிற்கிறது திராவிட இயக்கம். ஆனால் எடுத்தவுடனேயே அதன் சீரழிவுகள் அத்தனையையும் பிரயோகிக்கும் கட்சியாக உருவாகியுள்ள ஒரு புதிய கட்சி தன்னை அந்த திராவிடக் கட்சிகளின் மாற்று என்று சொல்லிக்கொள்கிறது. 'தனியாக ஆட்சியைப் பிடிப்போம்' என்ற பொய்யை போட்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்று வேறொரு நம்பத்தகுந்த பொய்க்கு மாறியிருக்கிறது. பெயருக்குகூட கொள்கை, சித்தாந்தம் பற்றி சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் தே.மு.தி.கவுக்கு இல்லை. விஜயகாந்த் சொல்வதெல்லாம் அந்தக் கட்சியின் கொள்கை. அவர் மனைவியும் மச்சானும் சொல்வதெல்லாம் கட்சியின் சித்தாந்தம். அதிகாரத்தில் பங்கெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அவரது கட்சிக்காரர்களுக்கு இதில் ஆட்சேபணைகளோ கருத்து வேறுபாடுகளோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பொது மக்கள் என்று அறியப்படுகிறவர்களுக்கு? தனி நபர் துதிபாடல் மேலோங்கியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் இதில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. கட்சியின் தானைத் தலைவர் அல்லது தலைவி அன்றன்றைக்கு என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சியின் கொள்கை. ஏற்கனவே அ.தி.மு.கவில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது. ஒரு கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற செயற்குழு கூடி, முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவரிடம் ஒப்படைக்கும் அரிய அரசியல் 'ஜனநாயகத்தைக்' கொண்ட தேசம் இது.
இன்றைய தமிழகச் சூழலில் தங்கள் கட்சியை வளர்க்கவும் காக்கவும் சொந்தமாக ஒரு சேனல் வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் நினைக்கின்றன. வெற்றி பெற்ற படத்தை காப்பியடிக்கும் சினிமா இயக்குனர்கள் போல ஒவ்வொரு கட்சியும் தி.மு.கவின் பாணியில் சொந்தச் சேனல்கள் தொடங்குகின்றன. மச்சான் சுதீஸின் கட்டுப்பாட்டில் விஜயகாந்தின் சேனல் 'செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளையும்' ஒளிபரப்பப் போகிறது. உண்மையான நோக்கம் அதுதானே. அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வரவேற்பை பயன்படுத்தி தங்கள் அரசியல் செய்திகளை கலந்து அனுப்ப வேண்டியதுதான் (நியாயப்படி அரசியல் சார்ந்த சேனல்களின் செய்தியை கலப்பட தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து, அதை வெளியிடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்!).
இந்தியா சுதந்திரம் பெற்ற காலக் கட்டத்தில் சினிமா தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சினிமாவின் சாத்தியங்கள் முழுமையாக அறியப்பட தொடங்கின. அந்தக் காலக் கட்டத்தில் சினிமாவை தனது கருவியாகக் கொண்டு தி.மு.க தன்னை வளர்த்துக்கொள்கிறது. அதற்கு இணையாக, தொலைக்காட்சியின் சாத்தியங்கள் தெரியத் தொடங்கிய 90களில் சன் டிவி வடிவத்தில் தி.மு.க சின்னத் திரையையும் தனது அரசியல் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியது. மு.கருணாநிதியின் நள்ளிரவுக் கைது, தர்மபுரி பஸ் எரிப்பு என பல்வேறு அரசியல் நிகழ்வுகள், தி.மு.கவுக்கு எவ்வளவு சாதகமாகத் திருப்ப முடியுமோ அவ்வளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக அல்லது நாடகத்தனமாக காட்டப்பட்டன. சமீபத்தில் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தற்காலிக பிளவு காரணமாக கலைஞர் டிவி என்ற புதிய வாகனமும் தி.மு.கவிற்கு கிடைத்திருக்கிறது. தி.மு.கவிடமிருந்து பிந்தங்கிவிடக்கூடாது என்பதால் அ.தி.மு.கவிடம் முன்பு ஜே.ஜே டிவி இருந்தது, இப்போது ஜெயா டிவி இருக்கிறது. அதன் வீச்சையும் வீரியத்தையும் தி.மு.கவின் டிவி ஆயுதங்களுடன் ஒப்பிட முடியாது என்றாலும் அவர்களுக்கும் சில தாக்குதல் சம்பவங்களும் அரசியல் பிரச்சனைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன. சினிமாவில் தி.மு.கவால் செய்ய முடிந்ததை பிற கட்சிகளால் நகலெடுக்க முடியாவிட்டாலும் தொலைக்காட்சி அதற்கான பலவீனமான வாய்ப்பைக் கொடுக்கிறது. டிவி சேனல் நடத்துவதற்கான அலைவரிசை, ஒளிபரப்புவதற்கான கருவிகளுக்கான செலவு முன்பைவிட கணிசமாக குறைந்துவிட்டது. தொலைக்காட்சி பெட்டி உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் விளம்பரதாரர்களும் கிடைக்கிறார்கள்; குறைந்தபட்ச உத்தரவாதமாக ராசிக்கல், நியூமராலஜி, ஆன்மீகம் என எதற்காவது நேரத்தை விற்றுவிடலாம். 2006ல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த் வரை டிவி சேனல் மோகம் வந்திருக்கிறது.
டிவியை பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு ரிமோட் கன்ட்ரோல் பெரிய சுதந்திரத்தைக் கொடுக்கிறது. எந்தக் கட்சி எந்த சேனலை வைத்திருக்கிறது என்பது வெளிப்படையானது என்பதால் பொது வாக்காளர்களை எட்டுவதற்கு பதில் அந்தந்த கட்சி சார்ந்த சேனல் தங்கள் கட்சியினரையே பிரதானமான பார்வையாளர்களாகக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒட்டுமொத்த சந்தையை ஏகபோகமாக வைத்திருப்பது, ஒன்றோடு ஒன்று தொடர்புடைய தொழில்களை வளைத்துப் போடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்களே இல்லாததுதான் இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்துக்களை உண்டாக்குகிறது. இதன் மூலம் மக்கள் என்ன செய்தியை பார்க்க முடியும், என்ன செய்தியை பார்க்க முடியாது என்பதை ஒரு தனிநபர் தீர்மானித்துவிட முடியும்; ஈழப் பிரச்சனையில் நடந்ததைப் போல. மக்கள் எந்த சேனலை பார்க்க முடியும், எதை பார்க்க முடியாது என்பதைக்கூட ஒரு குறிப்பிட்ட குழுமத்தால் தீர்மானிக்க முடிகிற, தீர்மானிக்கப்படுகிற ஆபத்துக்கு நடுவில் நாம் வாழ்கிறோம். இவ்வாறு அரசியல்மயமாகிவிட்டதால் தமிழ் டிவி உலகிற்கு புரஃபஷனலிசத்தின் வருகை மேலும் தள்ளிப் போகிறது. ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் கண் முன்னால் உயிருக்குத் துடிப்பதை தமிழக அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்று தேசிய சேனல் மிகப் பெரிய தார்மீக கேள்வி எழுப்பிய போது தமிழக ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவே . ஆளுங்கட்சி சேனல் அது தங்கள் ஆட்சிக்கு எதிரானது என்பதால் போடவில்லை. நாளிதழ்கள்கூட அந்த சம்பவத்தின் கொடூரத்தை உணராமல் அல்லது அரசு விளம்பரங்கள் குறித்த பயத்தால் அது பற்றி பெரிதாக எழுதவில்லை.
உங்கள் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு டிவியில் நீங்கள் பார்க்கும் 'செய்தி' ஏதோ ஒரு கட்சித் தலைவரின் உத்தரவால் உருவாக்கப்பட்ட அப்பட்டமான பொய் என்றால் அல்லது நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு செய்தியை ஏ.சி அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சித் தலைவரால் தடுத்து நிறுத்த முடியும் என்றால் அது உங்கள் உரிமைகளையே பறிப்பதாகும். இந்த தேசத்தின் நீங்கள் வாழும் பொதுச் சூழல் உங்களுடையது. அதை திரிக்கும், மறைக்கும் எந்த முயற்சியும் சிவில் சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய ஒன்று. ஒரு படத்தைத் தயாரிக்கும் ஒருவர், அவரே நடத்தும் சேனலில், அவரே நடத்தும் டாப் படங்கள் நிகழ்ச்சியில், அவரே நடத்தும் செய்தி நிகழ்ச்சியில் தனது படத்தையே சிறந்த படம் என்று சொல்லி புகழ்வது ஆபாசமானது. எனினும் அரசியல்மயமாகியிருக்கும் ஊடகங்கள் தங்களது வீழ்ச்சியின் பள்ளத்தாக்குகளை விரைவாகவே எட்டுவது நல்லதுதான். அனைவருக்கும் பொதுவான ஊடகங்களின் நம்பகத்தன்மை காணாமல் போகப் போக, ட்விட்டர், புளாக், செல்போன் போன்ற சமூக இணைப்பு ஊடகங்களின் எழுச்சி வேகம் பிடிக்கும். அவற்றின் வளர்ச்சி வேகத்திற்கு உதவும் விஜயகாந்திற்கு நன்றி சொல்வோம்.

புதன், 25 நவம்பர், 2009


வீழ்ந்த ஈழம் எழும்! காலம் அதைச் சொல்லும்!'சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக' - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2009

தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது கருணாநிதியின் பேனா

தமிழருவி மணியன்‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.


‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.

மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து

81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…?

சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ போன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.

நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.

‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.

கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.

சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?

வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?

‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

ஞாயிறு, 15 நவம்பர், 2009

AIDS : Made in America

AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி
(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )
இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன.
எய்ட்ஸ் என்பது இயற்கை வியாதியா?
எய்ட்ஸால் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. எயிட்ஸ் என்பது இயற்கையான வியாதியுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களை (Homo Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியுமல்ல. கருப்பின மக்களை மட்டும் அழிக்கவந்த வியாதியுமல்ல. எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்திலிருந்து..1) எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது இன்று உறுதியாகின்றது.(2) இத்தகைய ஆட்கொல்லிக் கிருமி உருவாக்கங்களின் தேவை என்ன? இது எத்தகைய அழிவுகளை உருவாக்க வல்லது என்பதனையும், இதன் பின்புலம் என்ன என்பதனையும் அறிந்தோமானால், அதிர்ச்சியளிக்கக்கூடிய பல உண்மைகள் புரியவரும்.
எய்ட்ஸின் பின்னணி
அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், மூன்றாம் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதியை அமெரிக்க காங்கிரஸ் இடமிருந்து (60 மில்லியன்டாலர்கள்) பெற்று அமெரிக்க இராணுவத் தலைமைக்கு (பென்டகன்) வழங்கியுள்ளது. இதற்கு பின்புலமாக செயற்பட்டவர் ஹென்றி கிஸ்சிங்கர் (அமெரிக்காவின் முன்னாள் Secretary of State) என்பதும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை உருவாக்கும் திட்டத்திற்கு MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals) எனப் பெயரிடப்பட்டது என்பதும், சீ.ஐ.ஏ.யின் துணையுடன் இத்திட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் கிஸ்சிங்கர் மற்றும் அவருடன் இருந்த மிகச் சில MK NAOMI விஞ்ஞானிகள் கைகளிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த இராணுவ உயிரியல் கொல்லி ஆராய்ச்சித் திட்டத்தின் விளைவாக மனிதனில் நோய் எதிர்க்கும் திறனை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட ஆற்றல் மிக்க கிருமியால் ஏற்படும் (இறப்பும்) முடிவுகளையும், அதற்கான விரிவுபடுத் தப்பட்ட திட்டங்களையும் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல இச்செய்திகள் வெளிவராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுமுள்ளன.
செயல்திட்ட வடிவங்கள்
1964 இல் உலக நாடுகளிலிருந்து பலதரப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சேகரிப்பதும், புற்றுநோய் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை பெருமளவில் சோதனைச் சாலைகளில் வளர்ப்பதற்குமான சிறப்பு வைரஸ் புற்றுநோய்த் திட்டமும் (SVCP - Special Virus Cancer Program 1962-77) தேசிய புற்றுநோய் நிறுவனமும் (NCI - National Cancer Institute) அரசின் நிதி உதவியோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து புற்று நோய்களையும் உள்ளடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.இவ்வாய்வுத் திட்டத்தின் கீழ், சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனித உடம்பில் பொருத்தி, சோதனை செய்துள்ளனர். 1964 இல் சிம்பன்சி குரங்கின் சிறுநீரகங்களை ஆறு மனிதர்களுக்குப் பொருத்தியதில் ஆறு பேரும் இறந்துள்ளனர். பின்னர் மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்றம் செய்ததில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.
SVCP திட்டத்தின் மூலமே விலங்குகளைப் பாதிக்கும் பல வைரஸ் கிருமிகளை மனிதர்களிடையே பரப்பும் சோதனைகள் நடந்தேறியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக புற்றுநோயை உண்டாக்கவும், மனித நோய் எதிர்ப்புத் திறனை சீர்குலைக்கக்கூடிய பல விலங்கு வைரஸ் கிருமிகள் மனித செல்களுக்கும்(Cells), திசுக்களுக்கும் மாற்றம் செய்யும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இக்குழுவில் Robert GalloTk (எய்ட்ஸ் கிருமியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாகும்.


இத்திட்டத்தில் ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, நெதர்லாந்து, இஸ்ரேல், உகண்டா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
பின்னர் இத்திட்டத்தில் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை (Biological Warfare) ஆய்வாளர்களும் இணைக்கப்பட்டனர். அக்டோபர் 18, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் உத்தரவின்பேரில் இராணுவ உயிரியல் போர்முறைச் சோதனைச் சாலைகளை SVCP இன் கீழ் கொண்டுவரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆய்வகத் தேவைகளுக்கான புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை தொடர்ந்து கிடைக்கும் வகையில் செய்தலே அதன் முக்கிய பணி என்றும் மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, (எய்ட்ஸை உண்டாக்கும் HIV அத்தகைய இனத்தைச் சேர்ந்தது) மனிதர்களை பாதிக்கும் வைரஸ் கிருமிகளை பெருமளவு வளர்த்தெடுப்பது போன்றவை பிற பணிகளாகவும் இருக்கும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஆய்வகங்களில் தான் சுண்டெலி, பூனை போன்ற வற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வைரஸ் கிருமிகளை குரங்குகளுக்குச் செலுத்தி அதன்மூலம் குரங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்தனர். இத்தகைய சோதனைகளில், இனம் விட்டு இனம் தாவும் (Species jumping) கிருமிகள் உருவாக்கப் படுவது பொதுவான விசயமாக இருந்து வந்தது.1970 இல் எய்ட்ஸ் ஏற்படுத்தும் HIV கூடவே ஒரு புதுவகை Herpes வைரஸ் ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த Herpes வைரஸ் தற்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் Kaposis Sacroma (Gay Cancer of AIDS) என்ற நோய்க்குக் காரணம் என நம்பப்படுகின்றது. உலகில் எய்ட்ஸ் தாக்கம் வருமுன் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு Kaposis Sacroma பாதிப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் கழித்து தெரியவந்த (1994இல்) Kaposis Sacroma வைரஸ்களுக் கும் மனிதர்களை ஒத்த தன்மையுள்ள விலங்கினங்களுக்கு (குரங்குகளுக்கு) வியாதியை ஏற்படுத்தும் Herpes வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும், அத்தகைய வைரஸினைத் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் விலங்குகளிடமிருந்து மனித உடலில் வெற்றிகரமாக செலுத்தும் ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன என்பதும் தெளிவாக உள்ளது.
மேலும், கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ள துடன், HIV வைரஸ் புற்றுநோயை உண்டாக்கவல்ல கிருமியே எனவும், எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாகவரும் ஒருவித புற்றுநோயே என்பதை 1984 இல் Robert Gallo (எயிட்ஸ் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) தெளிவுபடுத்தி உள்ளார்.
போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க்ஸ் செய்த பல ஆய்வுகளில் அவருக்குத் தெரியாமலேயே Hela செல்கள் கலந்திருந்தது அவருக்குப் பின்னர் தெரியவந்துள்ளது. அதே போல் புற்றுநோய் தடுப்பூசி ஆய்வுகளில் Hela செல்கள் அதிகம் கலந்திருப்பது பிறகு தெரியவந்துள்ளது. (4)1951 இல் முதன் முதலில் சோதனைச்சாலைகளில் மனித செல்களை வளர்த்தெடுத்தனர். இதற்கு பால்டிமோர்நகரைச் சேர்ந்த Hennrieta Lacks என்னும் இளம் கறுப்பின பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசுவே Hela செல் என அழைக்கப்படுகின்றது.இதே போல் இரண்டாம் உலகப் போரின் போது மனித இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Yellow Fever Vaccine இல் மஞ்சள் காமாலை வைரஸ் (Hepatitis Virus) கலந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.
1970 - 80 களில் குடர காய்ச்சலுக்கு எதிரான தடுப் பூசிகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரான Mycoplasma, வைரஸ் கிருமிகள் கலக்கப்பட்டிருந்ததுடன் இதை டெக்சாஸ் மாநில ஹன்ட்ஸ்விலி சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதை இராணுவமும், மருத்துவ மையங்களும் இணைந்து நடத்தியது. இந்த மனித விரோத பரிசோதனைக் குழுவில் DNA வடிவத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சனும் ஒருவர் என்பது வெட்கக்கெடான செய்தி. (இவர் தற்போது Human Genome Project இன் முக்கிய அலுவலர்)ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரகசியமாக செலுத்தப் பட்ட Mycoplasma Penetrans எனும் கிருமியைப் பற்றிய தகவல்களும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் டேவிட் என்னுமிடத்தில் ஒரு வகை குரங்குகளிடம் ஏற்பட்ட எயிட்ஸ் கொள்ளை நோய் (Simian AIDS) காரணமாக பெரும்பாலான குரங்குகள் இறந்துள்ளன. இதுவே முதலில் பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்று நான்கு இடங்களில் இது நிகழ்ந்துள்ளது. இந்த வகை குரங்குகள் இறந்துபோக HIVNa காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. இச்சம்பவத்தை மறைக்க பல குரங்குகள் அட்லாண்டாவி லுள்ள எர்கிஸ் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட குரங்குகள் அனைத்தும் 1980 வாக்கில் Simian AIDS நோயால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.
1974ல் கால்நடை மருத்துவர்களால் சிம்பன்சி குரங்குக் குட்டிகளிடம் எயிட்ஸ் போன்ற நோய் உருவாக்கப்பட்டது. இளம் சிம்பன்சி குரங்குக் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து, Bovine C Type Virus என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளிடமிருந்து கிடைக்கும் வைரஸ் கலந்த பாலை மட்டும் கொடுத்தால் அக்குரங்குக் குட்டிகள் ஒரு வருடத்துக்குள் நியுமோனியா காய்ச்சல் (The Gay Pneumonia of AIDS) கண்டு இறந்துள்ளன.
1979இல் பெண்டகன் மையத்தின் உயிரியல் விஞ்ஞானி Dr. Mac Arthur இன் உத்தரவுக்கிணங்க சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்ட HIV அமெரிக்காவில் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் விளைவாகவே AIDS கிருமி அவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பரப்பப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் நியுயோர்க் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களே. மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட 20 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்தத்தில் 1980 - 81 வாக்கில் செய்யப்பட்ட ஆய்வில் HIV Positive இருப்பது தெரியவந்தது. இது 1983 இல் 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1981இல் தான் HIV எயிட்ஸ் க்கு காரணம் என வெளியிடப்பட்டது.
நியுயார்க் நகர மன்ஹட்டன் (Manhatton) தான் எய்ட்சின் பிறப்பிடம். ஆபிரி;க்காவில் 1982ஆம் ஆண்டின் பின்னரே உறுதிசெய்யப்பட்ட AIDS நோயாளிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் வல்லுநர்கள் சிம்பன்சி குரங்குக ளிடம் இருந்துதான் மனிதனுக்கு எயிட்ஸ் கிருமி தொற்றி உள்ளது எனும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர்.1970களில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், குரங்குகளிடமிருந்து எய்ட்ஸ் தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.ஆபிரிக்காவில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் மக்களுக்கு, எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எயிட்ஸ் பரவியது என்பதை மே 11 1987 டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது
சோதனை விலங்குகளாக சொந்த நாட்டு மக்கள்
1965இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் 1997 வரை, விலங்குகளிடமிருந்து மனித செல்களில் பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை ஆய்வுசெய்யும் நியுயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு விலங்கின் உறுப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்ததக்கது.1994இல் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகளை அமெரிக்க மக்கள் மீது அரசு நடத்தியுள்ளதற்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு இணங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இவற்றை விசாரிக்க அறிவுரைக் குழுவினை ஏற்படுத்தினார். தனது அறிக்கையில் (3 ஒக்டோபர் 1995) 1960 வரை மருத்துவர்கள் நோயாளிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்கள்மீது சேதனை செய்துள்ளதை அக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக The U.S.Code annotated title 50, Chapter 32, Section 1520, dated July 30, 1977 என்கின்ற இச்சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சகம் தனது சொந்த மக்களையே சோதனை விலங்குகளாக நடத்த ஒப்புதல் அளித்து வந்துள்ளது.
எய்ட்ஸ் யாரையும் தாக்கலாம் என இருந்தாலும், ஆபிரிக்காவில் ஆண் - பெண் புணர்ச்சிக்குப் பின்பே எய்ட்ஸ் ஏற்பட்டது என்பதும், அமெரிக்காவில் அது ஓரினச் சேர்க்கையாளர்களிடம் (ஆண்களிடம்) அதிகமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவான விசயங்கள்.
HIV கிருமி இனம், மொழி, பாலினத்தை மதிக்காது எனக் கொண்டால் ஏன் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் எய்ட்ஸ் அதிகம் வரவேண்டும்?
எய்ட்ஸ் வல்லுநர்கள் அமெரிக்காவில் எய்ட்ஸின் பாதிப்பு ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதிக்குதம் எய்ட்ஸ் கிருமி வகை ஆபிரிக்காவில் இல்லவே இல்லை. பின் இது எப்படிச் சாத்தியம்?
1990களில் அணுவியல் உயிரியல் வல்லுநர்கள் எய்ட்ஸ் கிருமியில் எட்டு வகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் D வகை தான் பெருங்குடலைக் (Rectum) தாக்கும் திறனைக் கொண்டது. இந்தவகை எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்குகின்றது. மாறாக ஆபிரிக்க எயிட்ஸ் கிருமி பிறப்புறுப்பு செல்களை (Vaginal Cervical Cells) தாக்கும் திறன் இருப்பது தெரியவந்தது. டீ வகைக் கிருமிகளால் அச்செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.
1997 ஆய்வுகளில் பத்தில்; ஒரு அமெரிக்கருக்கு (வெள்ளை இன) எய்ட்ஸ் எதிர்க்கும் மரபணுக்கள் இருப்பதா கவும், ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் ஒருவர் கூட எய்ட்ஸ் பாதுகாப்பு மரபணுக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகையில் எயிட்ஸ் கிருமி என்பது சில இனக் குழுக்களையும் (கறுப்பர்களையும்) ஓரினச்சேர்க்கையாளர்களையும் திட்டமிட்டு ஒழிக்க உருவாக்கப்பட்ட Designer Virus என்பது தெளிவாகின்றது.
எய்ட்ஸ் கிருமி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Robert Gallo 1987இல் Play Boy சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஆண் -பெண் புணர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறலாம்" என்றும், "அமெரிக்க பொது மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி என்றும் பெரும் பிரச்சினையாக இராது" என்றும் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை (Super Germ)உருவாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது" A.H.Passerella - Director, Department of Defence, USA.
ஆக எயிட்ஸ் கிருமி அமெரிக்க ஆய்வகங்களில் உருவாகி பல ஆயிரம் மக்களை அழிக்கும் எண்ணத்துடன் (Weapon of mass destruction WMD) உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவான பின்பும், அமெரிக்கா மற்றவர்களிடம் உயிரியல் ஆயுதம் இருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கும் இவர்களின் யோக்கியதையை நாம் என்னவென்பது?
Reference:1.Dr. Alan Cantwell Jr. Queer Blood: The secret AIDS Genocide plot.2. John Seale, M.D. "Origins of AIDS viruses HIV-1 & HIV-2: Fact or Fiction?" The British Journal of the Royal Society of Medicine- 1988 (81: 617-619)3. Dr Leonard G. Horowitz. "Emerging virusus: AIDS. Ebola", Accident or International (1996)4. M.Gold, A conspiracy of cells: one woman's immortal legacy and the medical scandal it caused.5. William Blum, Rough State.6. "Small pox Vaccine Triggered AIDS Virus" The London Times Front page story 11.05.1987

ஞாயிறு, 1 நவம்பர், 2009

அமைதி புறாவிற்குஅஞ்சலி


நாளை 0௨-௧௧-௨00௯ [02-11-2009]பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
அன்னாரை பற்றி சில தகவல்கள்......
1984 ஆம் ஆண்டு முதல்...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். 1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்
1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்
முதன்மையானதாக இருந்தது.
மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்
காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்.
"ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.


தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

எழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்


முனைவர் வே.பாண்டியன்

தமிழகம் தற்போது ஒரு நிரந்தரக் கொதிநிலையில் உள்ளது. இது கடந்த ஓராண்டாகவே நீடித்துக் கொண்டுள்ளது. இது தமிழர் மனிதினில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. 16 தீக்குளிப்புகள், பலப்பல உண்ணாவிரதங்கள், போராட்டங்கள், ஆரப்பாட்டங்கள், எல்லாமே அறவழிப் போராட்டங்கள். ஆனால், இந்த "காந்தி தேசம்" அசைந்து கொடுக்கவில்லை. எனவே மக்கள், தமது மனதில், வன்முறைதான் அரசை வழிநடத்தும் என்ற புதிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
இது விபரம் தெரிந்த தமிழர் அனைவரும் கொண்டுள்ள உணர்வு. அதன் வெளிப்பாடாக எனது மொழிநடையும் தேவைப்படும் இடங்களில் மட்டும் அதை பிரதிபலித்தது. சில விமர்சனங்கள் வந்தன; எதிர் கொண்டேன். பாராட்டுகளும் வந்தன. என்னை அறிந்தவர்கள் பலர் தொடர்பு கொண்டு ஆதரித்தனர். இது பற்றி எனது தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு இளைய தோழர், காந்தியின் "எழுத்து விபச்சாரம்" பற்றிப் பேசி அதிர்வலைகளை உண்டாக்கினார். அவர் சொன்னார், உலகிலேயே தமிழில் தான் எழுத்திலக்கியத்தையே அகம் என்றும் புறம் என்றும் பகுக்கும் பாங்கு இருந்தது.
அதிலும் வெளிப்படையான மென்மையான காதலை மட்டும் வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பாங்குதான் தமிழின் அக எழுத்தாக இருந்தது. அதே நேரம், ஒருவர் சட்டத்திற்கும், சமூக ஒழுங்கிற்கும் உட்பட்டு, தனது உறவோடு அடையும் அந்தரங்கமான காதலின்பத்தை வெளியில் பகிர வேண்டியதில்லை. பகிரவும் கூடாது. அப்படிச் செய்வது நாகரிகமல்ல. அது ஒரு வேசித்தனம்! அப்படி இருக்கும் போது காந்தி, "சத்திய சோதனை" என்ற தனது நூலில், தனது அந்தரங்கங்களின் வக்கிரங்களைப் பச்சையாக எழுதினார். ஏதோ பாவ விமோசனத்திற்காகத்தான் என்பது போல அவரது எழுத்து தெரிந்தாலும், அதன் நோக்கம் மக்கள நடுவில் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தைக் கட்டுவதற்காகத் தான்.
யாருமே சொல்லக் கூசும் அந்தரங்கங்களை அவர் சொன்னதால், அவர் ஒரு சுத்த சத்தியவான் என்ற எண்ணமே அனைவரின் மனதிலும் மேலோங்கும். அதைப்போலவே, அவரை அனைவரும் வியப்பாகவும், அதிசயமாகவும் பார்த்தனர். இவர் ஒரு அக்மார்க் சத்தியவான் என்றே கருதினர். ஆனால், அவர் பிரதாபப் படுத்திக்கொண்டது போல அவரது நேர்மை இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் சத்தியத்திற்கு முரணாக, தெரிந்தே, உணர்ந்தே நடந்துள்ளார் என்பது தான் சத்தியத்தை உணர்ந்தவர்கள் தெரிந்து கொண்ட செய்தி. ஒரு அரசியல் உத்தியாக, தனது அந்தரங்கத்தை எழுதி, எதிர்பார்த்த விளைவுகளை அடைந்த அவரை, ஒரு "எழுத்து விபச்சாரி" என்பது தான் சரி என்றார் அந்த இளைஞர். உண்மைதான்! அகில இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பன, பனியா ஊடகங்கள் அம்பேத்கர் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ததால், காந்தி பற்றிய பல உண்மைகள் வெளிவருவதில் தாமதம் இருந்து வருகிறது.
வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேயர்கள் ஒத்துக் கொண்ட இரட்டை வாக்குரிமை முறையை, தனது உண்ணாவிரதத்தால் காந்தி முறியடித்தார். அம்பேத்கர், பெரியார், சுபாஸ் சந்திரபோஸ் போன்ற எண்ணற்றோரை இருட்டடிப்பு செய்தார். பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை விரைவுபடுத்தினார், இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு புரட்சியாக வடிவெடுத்த போதெல்லாம், அதை நீர்த்துப் போகும்படியான நடவடிக்கைகளை எடுத்து, "தனது திட்டப்படி" சுதந்திரம் கிடைக்குப்படிப் பார்த்துக்கொண்டார்.
இதற்கெல்லாம் காரணங்கள் உண்டு. எனது மாணவப் பருவத்தில், 1979 என்று நினைவு, The Illustratted Weekly of India என்ற இதழில் பிரத்தீஷ் நந்தி என்பவர், காந்தியின் பாலியல் ஒழுக்கம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர், ஆச்சார்யா கிருபளானியின் மனைவியாரை காந்தி பயன்படுத்திய விதம் பற்றி எழுதி இருந்தார். அது பல விமர்சனங்களை எழுப்பியது. விபரம் தெரியாத நானும், பிரதீஷ் நந்தி அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தேன். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது கிருத்துவசமயத்தை ஏற்றுக் கொள்ளலாமா என்று கிருத்துவத்தைப் படித்தேன், ஆனால், வாரத்தில் ஆறு நாட்கள் தவறு செய்துவிட்டு, ஏழாவது நாள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற தொனியில் அமைந்த அதன் தத்துவம் என்னைக் கவரவல்லை என்று எழுதியவர், இந்தியாவின் சமயங்களை அதைப்போல் அணுகிப்பார்த்தாரா? பௌத்தத்தை அவர் தழுவாதது ஏன்? ராமனின் அட்டூழியங்களை அவரிடம் எடுத்துக் காட்டியபோது, தான் வணங்குவது மனித ராமனல்ல, இறைவ ராமன் என்றார்.
மனித ராமனாகப்பட்டவர், இறைவ ராமனின் பல அவதாரங்களில் ஒன்று என்ற இந்துமதக் கருத்தை இவர் அறியாதவரா? இது போன்ற சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் தான் புத்தர் என்பதை அறியாதவரா இவர்? பல சமய இந்தியாவின் தலைவர் வெளிப்படையாக ஒரு மதக்கருத்தை ஆதரிப்பது சரியில்லையென்று அறியாதவரா? தான் ஒரு இந்துவாக இருக்கட்டும், தனிப்பட்ட முறையில் அவர் இந்து மதத்தை அனுசரிக்கட்டும், ஆனால், பொதுவான சபைகளில் ராம்பஜனை என்பது அபத்தமல்லவா? "ஈஸ்வரு, அல்லா தேரே நாம்" என்ற இவரது "பஜனையை" அவ்வம்மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கர், அன்பையும் சாதிகளற்ற சமூகத்தைப் போதித்த, பௌத்தத்தைத் தழுவியதும், இந்து சமயத்தில் பிறந்த ராமசாமிப் பெரியார் நாத்திகவாதியாகவும், சாதியை எதிர்ப்பவராகவும் இருந்ததும், மேட்டுக்குடி காந்தி என்ற அக்மார்க் சத்தியவான், வர்ணாசிரமக் கோமானான ராமனின் "பஜனை" பாடியதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சபர்மதி ஆசிரமத்தை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஓரு பிரபல அம்மையாரிடம் ஒருவர், காந்தி இவ்வளவு எளிமையாக வாழ்கின்றாரே என்றபோது, அவர் சொன்னாராம் We only know, how much we are spending to keep him starving (இவரை இப்படி அரைப்பட்டினியாய் வைத்திருக்க, நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் தெரியுமா?) என்று.
காந்தியாரின் "வேஷத்தை" இதைவிட யாரும் இப்படி நச்சென்று அம்பலப் படுத்த இயலாது. (அந்த அம்மையார் அம்பலப் படுத்துவதற்காக சொல்லவில்லை என்றாலும்!). எளிமை என்பது செலவில்லாமல் வாழ்வது. செலவு செய்து எளிமையாக வாழ்வது தான் நடிப்பென்பது! இந்த நடிப்பு காந்திக்கு தேவைப்பட்டது. தனது சேட்டு சமூகம் அகில இந்தியாவெங்கும் விரவி வாழ்கின்றனர். பார்ப்பனர்களும் அவ்வாறே! இவர்கள் உற்பத்தியோடு சம்பந்தமில்லாமல் வாழும் சுரண்டல் சமூகங்களே! ஒட்டுமொத்த இந்திய சமூகத்தை பணத்தால் சேட்டும், சூழ்ச்சியால் பார்ப்பனர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இந்தியா தேசிய இன அடிப்படையில் பிரியுமானால், இந்த இரு சமூகங்களுமே சிறுபான்மை சமூகங்களாக, அதிகாரமிழக்க நேரிடும். அதே நேரம் பல்தேசிய இந்தியாவை ஒரு குடைக்குள் கொண்டுவருவதும் அவ்வளவு எளிதான செயலல்ல. தனது மொழியைப் பேசாதவனை மக்கள் தங்களது தலைவனாக ஏற்கமாட்டார்கள். இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒரு மனிதனால் கற்றுத் தெளிய இயலாது.
மாறாக, ஒருவன் தியாகி, யோகி, அஹிம்சாவாதி என்று பலவாரெல்லாம் தன்னைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டால், மொழிகளைக் கடந்த ஒரு "தியாக" தேசியத்தைக் கட்டிவிடலாம். இதை உணர்ந்து, கேம்பிரிட்ஜிலே (மேற்குலகின் சூழ்ச்சிகளைப்)பயின்ற காந்தி, தன்னைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கிக் கொண்டார். அனைத்தையும் அறிந்த பார்ப்பனீயம் உறுதுணையாயிருந்தது.
வடநாட்டிலே ஏழைகளெல்லாம் பட்டும் பீதாம்பரமுமா உடுத்துகின்றனர்? அவர் மதுரையில் வந்து தனது உடைகளைக் களைந்து, பிச்சைக்கார வேடம் போட்டது, தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட தமிழனை இந்தியாவோடு சேர்க்கும் குயுக்தி தான். இவருக்கு முன்னால், தமது புரட்சிவழி விடுதலை அடைந்த மக்களுக்கு "தேசிய இனத் தன்னுரிமையைக்" கொடுத்த லெனினை இவர் தனது வழிகாட்டியாக ஏற்கவில்லை! இது காந்தி தெரிந்தே செய்த பெருங்குற்றம்! வரலாற்று ரீதியாக ஆய்ந்தால், காந்தி தன்னை நம்பிய மாற்றின மக்களுக்கு துரோகம் செய்தார் என்றே உணரவைக்கிறது. தனது இன நலத்துக்காக, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, சிறுபான்மை தேசிய இனங்களை சிறைவைத்துச் சென்றார் என்பது தான் உண்மை.
தனது இன மக்களுக்கான பாதுகாப்பாக அவர் இந்தியாவை உருவாக்கிக் கொள்ளட்டும். அதேநேரம், இந்திய மண்னின் ஒவ்வொரு இன மக்களுக்கும், அவர்களது தாயகம், மொழி, பாண்பாடு போன்றவற்றைக் காக்க, இந்திய அரசமைப்பில் வழி கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இங்குள்ள சிறுதேசியங்களின் உரிமையைக் காக்க குறைந்தபட்சம் ஒரு கூட்டாட்சி முறையையாவது அவர் திட்டமிட்டிருக்க வேண்டும்.
விடுதலைக்கு முன்பாகவே அவர் இந்தியாவிற்கான அரசியல் கோட்பாட்டை வகுத்திருக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புக் குழுவில் அனைத்து தேசிய இனங்களும் கண்டிப்பாக பங்குபெற வேண்டும், இந்திய வெளியுறவுத் துறையில் அனைத்து இனங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றெல்லாம் இருந்திருந்தால், இன்று ஈழம் இந்த நிலையில் இருந்திருக்காது. இன்று பார்ப்பானும், மலையாளியும், சேட்டும் மட்டுமே நமது தலைவிதியை தீர்மானிப்பவராக இருக்கின்றனர்.
மேற்குலகெல்லாம் தேசிய இன அடிப்படையில் தேசங்களாக மலர்ந்த காலகட்டத்தில், உலகின் உயர்ந்ததாகக் கருதப்படும் பல்கலையில் பயின்ற அவர், தேசிய இனச் சில்கல்களை அறியாதவரா? ஒரு குடும்பத்தந்தை தனது இறுதியைக் கருதி உயில் எழுதுவார். ஒரு பொறுப்புள்ள தந்தை, தனக்குப் பின் சிக்கல் வராமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடுவார். அதுபோன்றதொரு தொலைநோக்குப் பார்வை இல்லாதவரா நமது "மஹாத்மா?". இந்த காந்தி ஒரு தேசத்தந்தையா? இப்படிப்பட்ட காந்தி தேசம் தான் ஈழ விடுதலையை நசுக்கியது. ஈழ ஆதரவுப் போராட்டங்களை நசுக்கியது.
"காந்தி தேசம் சொல்லுது, புத்த தேசம் கொல்லுது" என்று முழக்கம் செய்தார்கள். இந்தியா என்பது காந்தி தேசம் மட்டுமல்ல, இது புத்தனைப் பெற்றெடுத்த தேசமும் தான். இந்தியாவின் 1974ன் அனுகுண்டு வெடிப்புக்கு "Smile of Buddha" என்று பெயரிட்டிருந்தார்களாம். அது வெற்றிகரமாக வெடித்தவுடன் "Buddha Has Smiled" என்று தயிர்சாதப் பசு அப்துல் கலாம், இந்திரா அரசிற்குத் தெரியப் படுத்தினாராம்!
என்ன...வக்கிரம் பாருங்கள்!!! இவர்களின் ரகசிய குழூஉக்குறி மொழிக்கு புத்தன் தான் கிடைத்தானா? பௌத்தத்தைப் பற்றிய இவர்களிது மதிப்பீடு அவ்வளவே! உலகின் ஒவ்வொரு தத்துவ நாயகனின் வாழ்க்கைக்குப் பிறகு, அவரது தத்துவங்கள் கேவலமாக திரிக்கப்படுவது தான் வரலாறாய் இருக்கிறது. இந்தியாவில் கார்ல் மார்க்ஸ் படும் அவதி நாம் அறியாததா? புத்தனைப் பெற்ற ஆரிய தேசமும் (இந்தியா), புத்தனை ("வெற்று")அடையாளமாகப் பெற்ற ஆரிய தேசமும் (இலங்கை), ஒரே லட்சணத்தில் தான். அது தான் ஆரியத்தின் லட்சணம்!!!
தமிழத் தேசியத்தைக் கட்டியெழுப்பும் நாம் "மஹாத்மா காந்தி" என்ற பொய்ப்பிம்பத்தை உடைக்க வேண்டும். நமது கத்தியில்லாப் போரின் முக்கியக் கட்டம் அதுவாக இருக்கட்டும். காந்தியைப்பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் படிப்போம். அவரின் உண்மைத் தன்மைகளை தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.
- முனைவர் வே.பாண்டியன்

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சனி, 17 அக்டோபர், 2009

இந்த உலகில் தான் நீங்களும் நானும் வாழ்கிறோம் நண்பர்களே.

இது என்னடா உலகம்..?.இந்த உலகில் தான் நீங்களும் நானும் வாழ்கிறோம் நண்பர்களே. ஒரு பக்கம் பணக்கார கும்மாளங்கள்.. ஒருப்பக்கம் பசுந்தளிர்களின் பட்டினி சாவுகள்... கடவுள்,இறைவன்,இறைதன்மை என்பது கற்பிதங்கள் என்று இதை கண்ட பின் உணர்வீர்கள்... இந்த காணொளியை பார்த்தும் நீங்கள் கலங்கவில்லை என்றால் நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள்... .இந்த நிலைமை தான் ஈழத்தில் முகாமில் இருக்கும் தமிழ் சிறார்களுக்கும்... தயவு செய்து போராடி அவர்களை காப்போம்...

இதை கண்டதும் சிங்களவனின் முகாமில் இருக்கும் நம் ஈழத்து சகோதர சிறார்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள்... இதயம் பதறி, உள்ளம் கலங்குகிறது...

பார்பானின் வித்தை...

(செய்தி - ஒபாமா தீபாவளி கொண்டாடினார்)
இந்தியாவா இருந்தாலும், அமெரிக்காவா இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவனோடு நெருங்கி இருக்கும் வித்தை பார்பானுக்கு தெரியும்...
ஒரு பூணூலும், நெத்தி நாமமும், கவுட்டுக்கு குறுக்கே கட்டிய பழைய வேட்டியும் அவனை எங்கே கொண்டு நிறுத்துகிறது பாருங்கள்...
எதற்கு இப்படியான சாதிகளை, மூட பழக்கவழக்கங்களை, பண்டிகைகளை உருவாக்கினான் பார்பான் என்று இப்பொழுது புரிகிறதா?..

வெள்ளி, 16 அக்டோபர், 2009

குருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசியல்வியாபாரிகள்


இலங்கை இந்திய கூட்டுச்சதித்திட்டத்தின் ஆலாபனைகள் தொடங்கிவிட்டன. இலங்கைக்கான ஊர்வலத்திருவிழாவை முடித்துவிட்டு வந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களை, மூலமூர்த்தியே நேரில் சென்று வரவேற்று கலந்துரையாடி வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாடும் நடத்திமுடித்துவிட்டார். இதனூடாக இலங்கை மக்கள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்திய மூலமூர்த்தியான கருணாநிதி, தனது சாதனைப்பட்டியலையும் சேர்த்தே நிரப்பியுள்ளார். ஊரே அழுதபோது ஊமையன் விசிலடித்தது போல தங்களது வழமையான கூத்தை நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு.இவர்களது பயணத்தின் அடைவின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக 58 ஆயிரம் பேர் முதலில் குடியேற்றபடுவார்கள் என்ற உறுதிமொழியை இலங்கை அதிபர் வழங்கியுள்ளதாக இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 11600 குடும்பங்களே குடியமர்த்தப்படுவதாக கருத்தில் கொள்வோமாக இருந்தால், ஏற்கனவே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து வன்னி வந்து திரும்பிபோக முடியாத மக்களும் மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் உறவினர்களால் வந்து பொறுப்பேற்கக்கூடிய குடும்பங்கள்தான் இந்த மீள்குடிமர்வு உறுதிப்பிரமாணத்தில் உள்ளடக்கக்கூடிய வாய்ப்புள்ளதே தவிர, வன்னிப்பகுதி மக்களல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐ.நா, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் பல மேற்கு நாடுகளும் மனிதஉரிமை அமைப்புகளும் தொண்டர் நிறுவனங்களும் மக்கள் குடியேற்றம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்த வண்ணமுள்ளன. அதேவேளை ஜீ.பி.எஸ் வரிச்சலுகை விடயத்தில் மேற்கு நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும் இலங்கை அரசு, தற்போது இந்தியாவின் துணையை நாடியிருப்பதும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்த இந்தியாவும் வாய்ப்பைப் பயன்படுத்தியிருப்பதன் எதிரொலிதான் இலங்கை அதிபரின் அழைப்புக்கடிதமும் இந்தியச் சட்ட மன்ற உறுப்பினர்களின் திடீர் விஜயமும் ஆகும்.வவுனியாவின் முகாமிலுள்ள எனது உறவினருடன் "இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தீர்களா? அவர்கள் உங்களுடன் கதைத்தார்களா? பார்த்தார்களா?" - என வினவினேன். அதற்கு அவர் “கெலிகொப்டர் பறந்து வந்து நாங்களிருக்கும் முகாமிலுள்ள பாடசாலையில் இறங்கியதைப் பார்த்தோம். எங்களைப் போகவிடவில்லை. ஏற்கனவே ஆசிரியர்கள் குறிப்பிட்ட பொதுமக்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களுடனேயே பேசிவிட்டுச் சென்றனர்" - என்றார். குறுகிய நேரத்திற்குள் இப்படித்தான் இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் அகதிமுகாம்களில் காட்சியளித்துள்ளனர். தொடர்ச்சியாக முகாம்களைக் கண்காணித்து வரும் மனித உரிமை ஆணையகமும், பராமரித்துவரும் ஜ.நாவின் அமைப்புகளும் முகாம் நிலைவரம் தொடர்பாக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசின் செல்லப்பிள்ளைகளாகச் சென்ற (செத்தவீட்டுக்குச் சென்றவனை தாரை தம்பட்டை சிவப்புக்கம்பள வரவேற்பு மாலை மரியாதைகள் என வரவேற்க, தங்களுக்குரிய பாணியிலே அவற்றை ஏற்றுக்கொண்ட இவர்கள்தான், ஈழத்தமிழர்களிற்காகக் கண்ணீர் விடுவதைத்தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறிய மூலமூர்த்தியின் அரசியல் பின்பற்றிகள்.) இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட, "உண்மை நிலமைகளை நேரில் கண்டறியும் குழுவின்" காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் அவர்கள், "போரினால் இடம்பெயர்ந்த மக்களிற்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமனங்களுக்கமைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. அங்கே பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன" என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.(நக்கினார் நாவிழந்தார் என்பது இதைத்தானோ!)

ஒரு நாடு தனது பிரஜைகளை சிறையகதிமுகாமில் வைத்திருப்பதற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்துள்ளார். ஏனென்றால், தமிழகத்தில் முகாம்களிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளையும் கிட்டத்தட்ட இதேபோன்று கடுமையான விதிமுறைகளுடன் சுதந்திரமாக சந்திப்பதற்கான தடை உட்பட பலகட்டுப்பாடுகளுடன் கையாளும் தன்மையை ஒப்பிட்டுத்தான் அப்படிக்கூறினாரோ தெரியவில்லை.
முகாம்களின் நிலைவரம் தொடர்பாக நற்சான்றிதழ் கொடுத்தது மட்டுமல்லாமல் உண்மை நிலையறியச்சென்ற குழுவின் எந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களும் முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை.(ஊடகத்திற்குப் பேட்டிகளை வழங்கக்கூடாது என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கையினதும் அன்புக்கட்டளையாகும்). மாறாக அரசாங்கத்திற்குச் சார்பான அறிக்கைகளையும் தங்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்ததாகக் காட்டுவதிலேயும் அக்கறையுடனிருக்கின்றனர். “போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்? இந்தியாதான் போரை நடத்தியது. தமிழகம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிக்க காரணமாக இருக்கப் போகிறீர்கள்” என்று குரலெழுப்பியதனூடாக எந்த நிலையிலேயும் தனது உரிமைக்கான கோரிக்கைகளை, தமது நியாயத்தை, தனது அரசியல் அபிலாசைகள் பற்றி, எவர் முன்னும் பேசத் தயங்காத, தேச விடுதலை தொடர்பான நீண்ட அரசியல் பார்வையுள்ள மக்கள் சமூகம்தான் ஈழத்தமிழர்கள் என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்கும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதால் தமிழனுக்கு எந்தத் தீர்வையும் திணிக்கலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எவரேனும் - குறிப்பாக இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் - நினைப்பார்களேயானால், அவர்களிற்கு மீண்டும் ஈழத்தமிழ்ச் சமூகம் பாடம் புகட்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஈழ ஏதிலியருக்கு இந்திய குடிஉரிமை

ஈழ உறவுகள் தமிழகத்தில் ‘அகதிகள்’ எனும் அவமானகரமான பெயரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தம் குடும்பக் காவலர் கருணாநிதி அண்ணா விழாவில் தி.மு.கவின் சார்பாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்.தம் குடும்பக் காவலர் கருணாநிதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ மக்களை எவ்வளவு கௌரவமாக நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால்...’அட போய்யா வெண்ட்ரு குடியுரிமையாவது கும்மாங்காவது’ என்று கடுப்பாவது  சத்தியம்.முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசு போடும் பிச்சைக்கு ‘ பணக்கொடை’ என்று பெயர். இந்த பணக்கொடைப் பட்டியல் இதோ:

                    (மாதம் ஒன்றுக்கு)

வ.எண்     குடும்ப உறுப்பினர்       பணக்கொடை

    

1           குடும்பத்தலைவருக்கு           ரூ.400

2             அடுத்த பெரியவர்கள்          ரூ.288

3.         முதல் குழந்தை(12 வயதுக்குக் கீழ்)     ரூ. 180

4.          அடுத்த குழந்தைகள்              ரூ. 90(அரசாணை எண் 755, பொது (ம.வா) நாள் 31-07-2006)

எப்படி எங்கள் தாராள மனது?

பெரியவர் என்றால் வயதானவர். வயதானவர்கள்தானே பல்வீனமாக இருப்பார்கள்.. அதுவும் போர் நடந்த மண்ணில் இருந்து வந்தவர்கள். பல்வேறு உடல் குறைபாடுகளுடன் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் 288ரூபாய் ‘கொடை’. அப்படியானால் ஒரு நாளைக்கு 9 ரூபாய் 60காசு. ஒரு வேளைக்கு 3ரூபாய் 20 காசு

ஒரு குழந்தைக்கு இதே கணக்கின்படி ஒரு வேளைக்குக் கிடைக்கும் ‘கொடை’ 1 ரூபாய்! . ’அடேங்கப்பா...இவ்ளோ காசை வச்சுக்கிட்டு இந்த அகதிங்கள்லாம் என்னதான் பண்ணுறாங்களோ’ என்று பொறாமையாக இருக்குமே!

மச்சி வீடு கட்டி வேலிக் கணக்குல வெள்ளாமை விட்டு, வீடு முழுசும் சொந்த பந்தங்களை வச்சு வித விதமா சமைச்சுப் போட்டு அதுக சிரிக்கறதப் பார்த்து தானும் சந்தோசப்பட்ட இனம் இது!

மனசாட்சி மண்ணாங்கட்டியெல்லாம் வேணாம்...தயவு செய்து உங்கள் பார்வையில் படும் எந்தப் பிச்சைக்காரரையும் கேட்டுப் பாருங்கள். அவர் இதை விடப் பல மடங்கு அதிகமாகவே சம்பாதிக்கிறார்!

’சார் கவர்மெண்ட்...அதுங்களுக்கு மானிய விலையில் அரிசி தருது... ஆக்சுவலா அதுங்களுக்குப் பெரிய செலவே இல்ல சார்’

என்று சிக்கன் சூப் உறிஞ்சிக் கொண்டே ஊர் நியாயம் பேசும் மிடில் க்ளாஸ் மன்னர்களுக்கு ஒரு தகவல்!

மானிய விலையில் தரப்படும் அரிசியைப் பற்றிய பட்டியல் இதோ:

வ.எண்         குடும்ப உறுப்பினர்வயது               அரிசியின் அளவு

1                      பெரியவர்8 வயதுக்குமேல்              தினசரி 400 கிராம்

2                      சிறியவர்8 வயதுக்கு கீழ்                  தினசரி 200 கிராம்(மைய அரசு கடித எண்.1 (26) /83-RH/1 தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் நாள் 19.12.1983)

அதாவது... எட்டு வயது முடிந்து ஒரு நாள் ஆனாலும்...20 வயது ஆனாலும்....40 வயது ஆனாலும்...80 வயது ஆனாலும் அவர்கள் ஒரு நாளைக்கு 400 கிராம் அரிசிதான் சாப்பிட வேண்டும்!

கசாப்புக் கடைக்குப் போற ஆடு கூட சரியா தீனி தின்னுச்சா...முறையா பராமரிக்கப்படுதான்னு பார்க்க அரசாங்க அதிகாரிங்க கசாப்பு வளாகங்கள்ல சோதனை நடத்தறாங்க தெரியுமா நண்பர்களே!

இதெல்லாம் கூட பரவாயில்லை என்று நினைக்க வைக்கும் அடுத்த தகவலைப் பாருங்கள்.

‘அகதிகளின் இறப்பின்போது இறுதிச் சடங்கிற்கு ரூ 100/ எரியூட்டும் அல்லது ஈமக்கிரியை செலவாக அரசால் வழங்கப்படுகிறது’ (அரசாணை எண்.49532/ம.வா.1/05-1, பொதுத்துறை நாள் 10.12.2006)

ஒரு மாலை வாங்க முடியுமா?

ஒரே ஒரு மூங்கில் கழி?

ஒரே ஒரு கோடித் துணி?

பாடை கட்ட கயிறு?

எரிக்கும் தொழிலாளி கூட 100 ரூபாய்க்கு வேலை செய்ய மாட்டாரே...!

அடத் தூ...இதெல்லாம் ஒரு அரசாங்கம்...இதுக்கு ஒரு அரசாணை...! மானங்கெட்டதுகளா...!

மூன்று வேளை சாப்பாடு போட வக்கில்லை. செத்தால் கூட பிணத்தை எரிக்கக் காசு கொடுக்கத் துப்பில்லை. இந்த லட்சணத்தில் இந்த அரசாங்கம் இவர்களுக்குக் குடியுரிமை வாங்கிக் கொடுக்குமாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக் கை தட்டுவோமாம்!

துப்பு கெட்ட நாய்களே...

நீங்க குடியுரிமை வாங்கித் தர்றது இருக்கட்டும். முதலில்... மக்கள் மூணு
வேளை சோறு திங்கறதுக்கு வழி பண்ணுங்க.

சனி, 26 செப்டம்பர், 2009

நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்?                                                   முன்தாஜர் அல் ஜெய்தி

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

                         நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

wikipedia-tamil

http://ta.wikipedia.org/wiki pidea-tamil